கடலுார்-கடலுார் மாவட்டத்தில் நேற்று 459 பேருக்கு தொற்று உறுதியானதையடுத்து, மொத்த பாதிப்பு 70,904 ஆக அதிகரித்துள்ளது.கடலுார் மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 459 பேருக்கு தொற்று உறுதியாகியது. இதனால், மாவட்டத்தில் மொத்த பாதிப்பு 70,904 ஆக அதிகரித்துள்ளது.மாவட்டத்தில் நேற்று 411 பேர் குணமாகி வீடு திரும்பிய நிலையில், 3,347 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதில், 412 பேர் வெளி மாவட்ட மருத்துவமனைகளில் உள்ளனர். நேற்று உயிரிழப்பு ஏதும் இல்லை.