சிதம்பரம்-சிதம்பரத்தில் கந்துவட்டி கேட்டு பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த இருவரை போலீசார் கைது செய்தனர்.திருநெல்வேலி மாவட்டம், நாரநம்மாள்புரத்தை சேர்ந்தவர் முருகன் மகள் கவிதா, 28: இவர், தற்போது சிதம்பரம் சிவசக்தி நகரில் வசிக்கிறார். இவர், கடந்த 2019 டிசம்பரில் சிதம்பரத்தில் செயல்படும் சப்தகிரி பைனான்ஸ் உரிமையாளர் சுரேஷ் என்பவரிடம் 50 ஆயிரம் கடன் பெற்றார். அதனை தினசரி 500 ரூபாய் வீதம் 75 ஆயிரம் வரை திரும்ப செலுத்தியுள்ளார்.அதன் பிறகு பணத்தை செலுத்த முடியவில்லை. இதனால், பைனான்சில் வேலை செய்த மீதிக்குடி தேவநாதன், 52; புவனகிரி மாரியம்மன் கோவில் தெரு சிவசுரேந்தர், 39 ஆகியோர் கவிதா வைத்திருந்த இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு, பணத்தை கட்டிவிட்டு வண்டியை எடுத்துக் கொள்ளுமாறு கூறி, அவரை அபசாமாக பேசி கொலை மிரட்டல் விடுத்தனர்.இதுகுறித்து கவிதா கொடுத்த புகாரின் பேரில், சுரேஷ், அவரது தாய் சுந்தரி, தேவநாதன், சிவசுரேந்தர் உட்பட நான்கு பேர் மீது சிதம்பரம் நகர போலீசார் வழக்குப் பதிந்து சுரேைஷ ஏற்கனவே கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், தேவநாதன், சிவசுரேந்தரை நேற்று கைது செய்தனர்.