கடலுார்-கடலுார் முதுநகரில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி, பைக்கில் சென்ற கூலித்தொழிலாளி இறந்தார்.கடலுார் அருகே சமட்டிக்குப்பம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார், 40; விவசாய கூலித் தொழிலாளி. இவர், கடலுார் செம்மண்டலம் கல்லுாரியில் படித்து வரும் தனது மகளை பார்க்க பைக்கில் வந்து கொண்டிருந்தார்.கடலுார் முதுநகர் ஐந்து கிணற்று மாரியம்மன் கோவில் அருகே வந்தபோது, அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ராஜ்குமார் மீது மோதியது. பலத்த காயமடைந்த அவர், கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்தார்.விபத்து குறித்து கடலுார் முதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.