நகர்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு | கடலூர் செய்திகள் | Dinamalar
நகர்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு
Added : ஜன 27, 2022 | |
Advertisement
 

கடலுார்-நகர்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டதால், கடலுார் மாவட்டத்தில் அரசியல் கட்சியினர் ஆயத்த பணிகளில் இறங்கியுள்ளனர்.தமிழகத்தில், 2019ல் ஊராட்சிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது. அடுத்து, விடுபட்ட 9 மாவட்ட ஊராட்சிகளுக்கு கடந்த ஆண்டு அக்டோபரில் நடத்தப்பட்டது. ஆனால், மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் என, நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில், பிப்., 19 ம் தேதி நகர்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த, தமிழக மாநில தேர்தல் ஆணையம் நேற்று மாலை அறிவித்தது.அதையொட்டி, கடலுார் மாவட்டத்தில் கடலுார் மாநகராட்சி, திட்டக்குடி, வடலுார், சிதம்பரம், விருத்தாச்சலம், பண்ருட்டி, நெல்லிக்குப்பம் ஆகிய 6 நகராட்சிகள், அண்ணாமலை நகர், காட்டுமன்னார்கோவில், பரங்கிப்பேட்டை, குறிஞ்சிப்பாடி, புவனகிரி, கங்கைகொண்டான், பெண்ணாடம், ஸ்ரீமுஷ்ணம், சேத்தியாதோப்பு, லால்பேட்டை, தொரப்பாடி, மங்கலம்பேட்டை, மேல்பட்டாம்பாக்கம், கிள்ளை ஆகிய 14 பேரூராட்சிகளுக்கு, தேர்தல் நடத்தப்படுகிறது.கடலுார் மாநகராட்சியில் 45 வார்டு பதவிகளுக்கும், 6 நகராட்சிகளில் 180 கவுன்சிலர் பதவிகள், 14 பேரூராட்சிகளில் 222 பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக, நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடக்குமா, நடக்காதா என, அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு இருந்த நிலையில் நேற்று திடீரென அறிவிக்கப் பட்டதால், கடலுார் மாவட்டத்தில் அரசியல் கட்சியினர் சுறுசுறுப்படைந்து, தேர்தலுக்கான ஆயத்த பணிகளை துவங்கியுள் ளனர்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X