பெண்ணாடம்-திட்டக்குடி அருகே அம்மன் தாலி, உண்டியல் காணிக்கையை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.திட்டக்குடி அடுத்த வி.சித்துார் வெள்ளாற்றங்கரையோரம் பச்சையம்மன் கோவில் உள்ளது. நேற்று காலை 9:00 மணியளவில், கோவில் கதவின் பூட்டு உடைந்திருப்பதை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்து ராமநத்தம் போலீசார் வந்து பார்த்தபோது, அம்மன் அணிந்திருந்த 1 கிராம் தாலி, காணிக்கை மற்றும் 40 கிலோ எடையுள்ள வெண்கல உலோகத்திலான மணியை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிந்தது.இதுகுறித்து, ராமநத்தம் போலீசார் வழக்குப் பதிந்து, மர்மநபரை தேடி வருகின்றனர்.