கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சியில் நடந்த பருத்தி வார சந்தையில் 80.78 லட்சம் ரூபாய்க்கு பஞ்சு கொள்முதல் செய்யப்பட்டது.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், விவசாயிகள் அதிகளவில் பருத்தி சாகுபடி செய்கின்றனர். இதனையொட்டி, கள்ளக்குறிச்சி வேளாண்மைஉற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ஆண்டுதோறும் பருத்தி சந்தை நடத்தப்படுகிறது.தற்போது, பஞ்சு அறுவடைசெய்யப்படுவதால், வாரசந்தை நடைபெற்று வருகிறது. இங்கு கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகள் மட்டுமின்றி விழுப்புரம், கடலுார்உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் பஞ்சு மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.அதேபோல், சேலம்,திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகள் பஞ்சு மூட்டைகளை கொள்முதல் செய்கின்றனர்.நேற்று 539 விவசாயிகள்1,987 எல்.ஆர்.ஏ., ரகம், 586கொட்டு ரகம், 6 ஸ்வின் ரகம் என மொத்தம் 2,579 பஞ்சு மூட்டைகளைக் கொண்டு வந்தனர். வியாபாரிகள் விலை நிர்ணயம் செய்ததில், எல்.ஆர்.ஏ., ரகம் அதிகபட்சம் 10 ஆயிரத்து 266 ரூபாய்க்கும், குறைந்தபட்சம் 8,609 ரூபாய்க்கும் விலை போனது.அதேபோல், கொட்டு ரகம் அதிகபட்சம் 5,558 ரூபாய்க்கும், குறைந்தபட்சம் 3,388 ரூபாய்க்கும் விலை போனது. ஸ்வின் ரகம் 11ஆயிரத்து 500 ரூபாய்க்கு விலை போனது.சந்தையில் நேற்று 80 லட்சத்து 78 ஆயிரம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.