காபியில் களிமண் கலக்கறாங்க: 'பேஷ்' என குடிப்பவர்கள் உஷார்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஜன
2022
11:59

கோவை: காபித்துாளில் களிமண் கலப்படம் செய்யப்பட்டுள்ளதா என்பதை, வீட்டிலேயே எளிய சோதனையில் கண்டறிந்து விட முடியும்.

அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பண்டங்களில் கலப்படம் செய்யும் போக்கு, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கவனத்துடன் இல்லையெனில், கலப்பட கொள்ளையர் நம் உடல் நலத்தை காவு வாங்கி விடுவர்.மக்கள் விரும்பி குடிப்பதால் காபித்துாள் விலையும் அதிகம்; விற்பனையும் அதிகம். இதை சாக்காக பயன்படுத்தி, கலப்பட கும்பல், அதில் களிமண்ணை கலந்து விடுவதாக உணவு பாதுகாப்புத்துறையினர் கூறுகின்றனர்.

இதை வீட்டில் செய்யும் எளிய சோதனையில் கண்டுபிடித்து விட முடியும். ஒரு கண்ணாடி பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் அரை டீஸ்பூன் காபித்துாள் போட்டு விட்டு, 5 நிமிடங்கள் காத்திருக்க வேண்டும். கலப்படம் இல்லாத காபித்துாள் என்றால், தண்ணீரின் அடிப்பகுதியில் எதுவும் படிந்திருக்காது.கலப்படம் செய்யப்பட்ட காபித்துாள் என்றால், கண்ணாடி பாத்திரத்தின் அடிப்பகுதியில் சேறு போல படிந்திருக்கும். அதை கையில் தொட்டு தேய்த்துப் பாருங்கள்; கலப்படம் என்பதை எளிதில் புரிந்து கொள்ளலாம்.

'உணவுப் பண்டங்களில் கலப்படம் குறித்து ஏதேனும் புகார் இருந்தால், வாட்ஸ்அப் புகார் எண், 94440 42322 மூலம் தெரிவிக்கலாம்; உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்' என்கின்றனர், உணவுப் பாதுகாப்புத்துறையினர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
27-ஜன-202216:26:24 IST Report Abuse
Thiagarajan Kodandaraman தலையில களி மண்ணு இருக்கானு கேட்டப்ப புரியல ..இப்ப வயத்துலயும் மன்னானு கேப்பாங்களோ
Rate this:
Cancel
Samathuvan - chennai,இந்தியா
27-ஜன-202214:26:25 IST Report Abuse
Samathuvan இதே மாதிரி உணவு பாதுகாப்பு துறையினரிடம் கலப்படம் இருந்தால் எப்படி கண்டுபிடிப்பீங்க?
Rate this:
Cancel
Sivagiri - chennai,இந்தியா
27-ஜன-202213:12:39 IST Report Abuse
Sivagiri கலப்படம் என்று லிஸ்ட் போட்டால் மிக நீளமாகிக் கொண்டே போகுது . .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X