கோடிக்கணக்கான சொத்து; பூஜை செய்ய ஆளில்லை: பாழடைந்த நிலையில் மசராயர் கோவில்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

27 ஜன
2022
12:02
பதிவு செய்த நாள்
ஜன 27,2022 12:01

பெ.நா.பாளையம்: கோவை மாவட்டம் நரசிம்மநாயக்கன்பாளையத்தில் உள்ள மசராய பெருமாள் கோவிலுக்கு, பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் இருந்தும் இக்கோவில், பராமரிப்பில்லாமல் புதர் மண்டி, பாழடைந்து கிடக்கிறது.

நரசிம்மநாயக்கன் பாளையம் பழைய ஊரில், 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த மசராய பெருமாள் கோவில் உள்ளது. ஓடுகள் வேயப்பட்ட கோவிலில், மசராயப்பெருமாள், மரச்சிலை வடிவில் அருள்பாலிக்கிறார். ஏழு ஆண்டுகளுக்கு ஒரு முறை ராக்கிபாளையம், புதுப்பாளையம், பூச்சியூர் உள்ளிட்ட, 18 கிராமங்களில் உள்ள மக்கள் ஒன்றுகூடி, இக்கோவிலில் விழா நடத்துவது வழக்கம். அப்போது, மசராய பெருமாள் சுவாமி வெள்ளை நிறக் குதிரையில், 18 கிராமங்களின் வழியாக வந்து கோவிலை அடைவது, இந்த நிகழ்ச்சியின் சிறப்பம்சம்.

கடந்த, 60 ஆண்டுகளில், இதுவரை ஒருமுறை மட்டுமே, மசராய பெருமாள் கோவிலில், நோன்பு சாட்டப்பட்டுள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமான, 3.55 ஏக்கர் நிலம் நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ளது. இதன் இன்றைய மதிப்பு பல கோடி பெறும். ஆனாலும், இக்கோவிலில் நித்திய பூஜைகள், அனுஷ்டானங்கள் அனுசரிக்கப்படுவதில்லை. இதனால், மசராய பெருமாள் கோவில் பக்தர்கள் பெரும் வேதனைக்கு உள்ளாகி வருகிறார்கள்.
இதுகுறித்து, நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சி முன்னாள் தலைவர் ஆனந்தன் கூறுகையில், "மசராயர் என்ற முனிவர் இங்கு தியானம் செய்து வந்ததாகவும், அவர் முக்தி அடைந்த பிறகு, அவரின் நினைவாக இக்கோவில் கட்டப்பட்டதாக, செவிவழிச் செய்திகள் கூறுகின்றன. கோவில் மொத்தமாக எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இக்கோவிலை புனரமைத்து, புதியதாக கட்ட, அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (28)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Cheran Perumal - Radhapuram,இந்தியா
01-பிப்-202219:02:10 IST Report Abuse
Cheran Perumal சொல்லிவிட்டீர்கள் அல்லவா. உடனே ஒரு குருப் கிளம்பியிருக்கும், சொத்துக்களை ஆட்டை போட.
Rate this:
Cancel
ponssasi - chennai,இந்தியா
01-பிப்-202217:50:20 IST Report Abuse
ponssasi எனது பாஸ் ஒரு சிவ பக்தர், பத்து ஆண்டுகளுக்கு முன் ஒரு சிதிலமடைந்த சிவன் கோவிலை புரணமைத்து நித்ய பூஜை செய்வதற்கு ஒருவரை நியமித்து, பிரதோஷ நாட்களில் நண்பர்களுடன் சேர்ந்து சிறப்பாக செய்துவந்தார், அதனால் கோவிலுக்கு கூட்டம் வர ஆரம்பித்தது சிறப்பான பூஜைகளும் நடக்க ஆரம்பித்துவிட்டன தற்போது உள்ளூர் பிரமுகர்கள் நீங்கள் இனி வரவேண்டாம் நாங்கள் இனி தமிழில் அர்ச்சனை செய்யப்போகிறோம் என்று தடுத்துவிட்டனர். இதனை வருடங்களாக இவர்கள் எங்கே போனார்கள்.
Rate this:
Cancel
Sai - Paris,பிரான்ஸ்
28-ஜன-202218:13:29 IST Report Abuse
Sai ONLY THE FITTEST WILL SURVIVE. - CHARLES DARWIN. இந்த கருத்தை மகா பாரதத்திலும் காண்கிறோம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X