ஈரோடு மாவட்டத்தில் குடியரசு தினம் கோலாகலம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஜன
2022
14:50

ஈரோடு: ஈரோடு வ.உ.சி. பூங்கா விளையாட்டு மைதானத்தில், 73வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. ஈரோடு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, தேசிய கொடியேற்றி போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் மூவர்ண பலூன்களை வானில் பறக்க விட்டார். போலீஸ் உள்ளிட்ட பல்வேறு துறையை சேர்ந்த, 229 பேருக்கு பதக்கம், பாராட்டு சான்று வழஙகப்பட்டது. 25 சுதந்திர போராட்ட தியாகிகள், 74 மொழி போர் தியாகிகள், ஐந்து எல்லை காவலர்கள் என மொத்தம், 104 பேர் கவுரவப்படுத்தப்பட்டனர். கொடுமுடி குப்பம்பாளையம் ராசாம்பாளையத்தில் உள்ள சுதந்திர போராட்ட தியாகி முத்துசாமி வீட்டுக்கு, ஈரோடு கலெக்டர் சென்று தியாகியை கவுரவித்தார்.
* கோபி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், ஆர்.டி.ஓ., பழனிதேவி தேசிய கொடியை ஏற்றி வைத்து, போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார். தாசில்தார் தியாகராஜ், வருவாய்த்துறை பணியாளர்கள் உடனிருந்தனர். கோபி நகராட்சி ஆபீசில், கமிஷனர் பிரேம் ஆனந்த் தேசியக்கொடி ஏற்றினார். தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் தியாகராஜ் தேசிய கொடியேற்றினார்.


* பவானி டி.எஸ்.பி., அலுவலகத்தில் டி.எஸ்.பி., கார்த்திகேயன் கொடியேற்றி இனிப்பு வழங்கினார். நகராட்சி அலுவலகத்தில் ஆணையாளர் தாமரை கொடியேற்றினார். தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் முத்துகிருஷ்ணன் கொடியேற்றினார்.


* அந்தியூர் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் விஜயகுமார், யூனியன் அலுவலகத்தில், யூனியன் சேர்மன் வளர்மதி தேவராஜ், பேரூராட்சி அலுவலகத்தில் எம்.எல்.ஏ.,வெங்கடாசலம் மற்றும் யூனியனுக்கு உட்பட்ட பஞ்சாயத்துகளில் அந்தந்த பஞ்., தலைவர்கள் தேசியகொடி ஏற்றி மரியாதை செலுத்தினர்.


* புன்செய்புளியம்பட்டி நகராட்சி அலுவலகத்தில் கமிஷனர் சக்திவேல், தேசிய கொடி ஏற்றினார். பவானிசாகர் யூனியன் அலுவலகத்தில் நடந்த குடியரசு தின விழாவில், யூனியன் சேர்மன் சரோஜா தேசிய கொடியை ஏற்றினார். பி.டி.ஓ., மைதிலி, யூனியன் அலுவலக பணியாளர்கள் கலந்துகொண்டனர்.


* சென்னிமலை பஸ் நிலையம் முன், ஏ.ஐ.டி.யூ.சி., நிர்வாகி பாரதி தலைமையில், ஐ.என்.டி.யூ.சி., நிர்வாகி பழனிசாமி தேசிய கொடியேற்றினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் நாகப்பன், ஏ.ஐ.டி.யூ.சி., செயலாளர் பொன்னுசாமி, எல்.பி.எப். தொழிற்சங்க நிர்வாகி ராஜேந்திரன், சி.ஐ.டி.யூ.,நிர்வாகி ரவி உட்பட பலர் பங்கேற்றனர்.


* சத்தியமங்கலத்தில், இந்தியகம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நகர செயலாளர் ஸ்டாலின் சிவக்குமார் தலைமையில், பழைய பஸ்டாண்ட் அருகில், சுதந்திர போராட்ட வீரர்களான வேலுநாச்சியார், வ.உ.சி., பாரதியார் ஆகியோரின் உருவபடங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதே போல் சத்தி புது பஸ் ஸ்டாண்ட் அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், நகரசெயலாளர் வாசுதேவன் தலைமையில் நிர்வாகிகள், சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு மரியாதை செலுத்தினர்.

 

Advertisement
மேலும் ஈரோடு கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X