ஈரோடு: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதன்படி ஈரோடு மாநகராட்சியில், 60 வார்டு, நகராட்சிகளை பொறுத்தவரை பவானி, 27 வார்டு, கோபி, 30 வார்டு, புளியம்பட்டி, 18 வார்டு, சத்தியமங்கலம், 27 வார்டுகள். பேரூராட்சிகளை பொறுத்தவரை கருமாண்டிசெல்லி பாளையம், அந்தியூர் சிவகிரியில் தலா, 18 வார்டுகள், அம்மாபேட்டை, ஆப்பக்கூடல், அரச்சலூர், அரியப்பம்பாளையம், அத்தாணி, அவல் பூந்துறை, பவானிசாகர், சென்ன சமுத்திரம், சென்னிமலை, சித்தோடு, எலத்தூர், ஜம்பை, காஞ்சிகோவில், காசிபாளையம், கெம்ப நாயக்கன்பாளையம், கிளாம்பாடி, கொடுமுடி, கொளப்பலூர், கொல்லன்கோவில், கூகலூர், லக்கம்பட்டி, மொடக்குறிச். மற்றும் நம்பியூர், நசியனூர், நெரிஞ்சிபேட்டை, ஒலகடம், பி. மேட்டுப்பாளையம், பள்ளபாளையம், பெரிய கொடிவேரி, பெருந்துறை, பெத்தாம்பாளையம், சலங்கபாளையம், வடுகபட்டி, வாணிப்புத்தூர், வெள்ளோட்டம்பரப்பு, வெங்கம்பூரில் தலா, 15 வார்டுகள். நல்லாம்பட்டி, பாசூர், ஊஞ்சலூரில் தலா, 12 வார்டுகள் என, மாநில தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.