டெல்டாவுக்கு 237 டி.எம்.சி., தண்ணீர் திறப்பு; மேட்டூர் அணை பாசன நீர் நாளை நிறுத்தம்?
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஜன
2022
18:24

மேட்டூர்: டெல்டாவுக்கு, 237 டி.எம்.சி., தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், மேட்டூர் அணை பாசன நீர் நாளை நிறுத்தப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. கொள்ளளவு, 93.47 டி.எம்.சி., ஆண்டுதோறும் ஜூன், 12ல் அணையில் இருந்து பாசனத்துக்கு நீர் திறக்கப்படும். இதன்மூலம் டெல்டா மாவட்டங்களில், 17.10 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். பாசனத்துக்கு நீர் திறக்க, அணையில், 90 அடிக்கு மேல் நீர் இருக்க வேண்டும். கடந்த ஆண்டு ஜூன், 12ல் நீர்மட்டம், 96.81 அடியாக இருந்ததால், முதல்வர் ஸ்டாலின், மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்து வைத்தார். தொடர்ந்து, 231 நாள் திறக்கப்பட்டு, ஜன., 28ல் டெல்டா பாசன நீர் நிறுத்தப்பட்டு, காவிரி கரையோர மாவட்ட குடிநீர் தேவைக்கு நீர் திறக்கப்படும். அதன்படி நாளை மாலை, மேட்டூர் அணை டெல்டா பாசன நீர் நிறுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அணைக்கு ஜூன் முதல் ஜனவரி வரை, 167.25 டி.எம்.சி., நீர் கர்நாடகா வழங்க வேண்டும். நேற்று வரை, 237 டி.எம்.சி., நீர் அணைக்கு வந்துள்ளது. இதில், டெல்டா பாசனத்துக்கு, 127 டி.எம்.சி., கால்வாய் பாசனத்துக்கு, 8.5 டி.எம்.சி., உபரியாக, 79.5 டி.எம்.சி., குடிநீருக்கு, 1.3 டி.எம்.சி., என, கடந்த ஜூன் முதல் நேற்று வரை, 216.3 டி.எம்.சி., நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. நேற்று அணை நீர்மட்டம், 109.45 அடி, நீர் இருப்பு, 77.63 டி.எம்.சி.,யாக இருந்தது. கடந்த ஆண்டு டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்ததால், பாசனத்துக்கு நீர் தேவை குறைந்தது. இதனால், 5 ஆண்டுகளில் நடப்பாண்டில்தான் டெல்டா பாசனத்துக்கு மிக குறைவாக, 127 டி.எம்.சி., நீர் திறக்கப்பட்டுள்ளது. அணையில், 77.63 டி.எம்.சி., நீர் இருப்பு உள்ளதால், கோடைகாலத்தில் காவிரி கரையோர மாவட்ட குடிநீர் தேவைக்கு தட்டுப்பாடின்றி வழங்க முடியும். டெல்டா குறுவை சாகுபடிக்கு வரும் ஜூன், 12ல் குறித்தபடி நீர் திறக்க முடியும்.

 

Advertisement
மேலும் சேலம் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X