'சீட்டு, நோட்டு'க்கு பெண்ணை வைத்து 'வீடியோ'? தி.மு.க., நிர்வாகிகளிடம் தனிப்படை விசாரணை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஜன
2022
18:26

சேலம்: உள்ளாட்சி தேர்தலில், இடங்கணசாலை நகராட்சி தலைவர் பதவிக்கு வாய்ப்பை பெறவும், பணம் பறிக்கவும், தி.மு.க., நிர்வாகிகள் இடையே, பெண்ணை வைத்து மிரட்டி பணம் பறித்ததாக புகார் எழுந்ததால், தனிப்படை போலீசார் விசாரிக்கின்றனர்.

சேலம் மாவட்டம், இடங்கணசாலையை சேர்ந்தவர் செல்வம், 35; சேலம் மேற்கு மாவட்ட, தி.மு.க., தொண்டரணி அமைப்பாளர். இவர், இடங்கணசாலை நகராட்சி தலைவர் பதவிக்கு தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை பெற முயற்சித்து வருகிறார். அதேபோல் கட்சி நிர்வாகிகள் சிலர் முயற்சிப்பதால் போட்டி நிலவுகிறது. இந்நிலையில், செல்வத்தின் தம்பி சீனிவாசன், 28, கடந்த, 21ல், மகுடஞ்சாவடி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். அதில், 'காடையாம்பட்டியை சேர்ந்த ரூபன், 30, என் மொபைல் போனையும், 650 ரூபாயையும் பறித்துக்கொண்டு, தகாத வார்த்தையால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தார்' என தெரிவித்திருந்தார். இதையடுத்து ரூபனை, போலீசார் கைது செய்தனர்.

தொடர்ந்து கடந்த, 24ல், சேலம், சூரமங்கலத்தை சேர்ந்த கலைச்செல்வி, 35, மகுடஞ்சாவடி போலீஸ் ஸ்டேஷனில் அளித்த புகார் மனு: நான் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் பணிபுரிகிறேன். சில நாளுக்கு முன், காடையாம்பட்டி ரூபன், ரமேஷ் ஆகியோர் என்னை காரில் கடத்திச்சென்றனர். அப்போது, 'தி.மு.க., நிர்வாகிகளிடம் ஆபாசமாக பேச வைத்து, வீடியோ எடுக்கச்செய்தது செல்வம் தான்' என, என்னை கத்தி முனையில் மிரட்டி கூறச்செய்து, அதன் ஆடியோ, வீடியோ சிலவற்றை பரப்பியுள்ளனர். அதனால், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார். ஆனால், கலைச்செல்வியை வைத்து, சேலம் மாவட்ட தி.மு.க.,வில், 'சீட்'டும், 'நோட்டும்' பெற நடத்திய நாடகங்கள் என, புகார் எழுந்தது. இதுதொடர்பாக, கலைச்செல்வி பேசும் சில வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. அதன் விபரம்: நாகேந்திரனிடம் பேசி, 'ரெக்கார்டிங்' மட்டும் எடுத்துத்தந்தால் வேலை வாங்கி தருவதாக கூறினர். அந்த ஆதாரங்களை, முதல்வரிடம் கொடுப்பதாக தெரிவித்தனர். பின், ரெக்கார்டிங் போதாது. அவரிடம் தவறாக நடக்கச்சொன்னார்கள். அது முடியாது என தெரிவித்து விட்டேன். இதையடுத்து, என் வீட்டில் கேமரா பிட் பண்ண செல்வம் சொன்னார். இது ஒன்று மட்டும் செய். அப்புறம் வீடு மாற்றிக்கொள்ளலாம். ரவியிடம் முழு பணம் உள்ளது. இந்த வேலைய முடித்துக்கொடுத்ததும், உனக்கு வீடு கட்டுற வேலைய ஆரம்பித்திடலாம் என்றனர். சிலர் கேமராவை என் வீட்டில் பொருத்தினர். இதையடுத்து, நாகேந்திரன் என் வீட்டில் இருந்தது பதிவானது. மேலும், என்னை தனிப்படை அமைத்து தேடுகின்றனராம். அந்த அளவு நான் ஏதும் தவறு செய்யவில்லை. செய்ய சொன்னது செல்வம் தான். நான் பணம் எதுவும் வாங்கவில்லை. பணம் வாங்கியது செல்வம் தான். இவ்வாறு சில வீடியோக்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து முழு உண்மை அறிய, தனிப்படை போலீசார் களம் இறங்கியுள்ளனர். அவர்கள், பெண் மூலம் யார், யாரிடம் பணம் பறிக்கப்பட்டது என, பட்டியல் தயாரித்து விசாரிக்கின்றனர். இதுதொடர்பாக, கலைச்செல்வியிடம் போலீசார் விசாரித்தபோது, அவர் கூறுகையில், ''நான் யாரிடமும் நெருக்கமாக இல்லை; என் மீது வீண் பழி சுமத்தப்படுகிறது. யாரோ பரப்பிய வதந்தியால், என் உயிருக்கு ஆபத்துள்ளது' என, தெரிவித்துள்ளார்.

தி.மு.க., தொண்டரணி அமைப்பாளர் செல்வம் கூறியதாவது: கலைச்செல்வியை மிரட்டி எனக்கு எதிராக வாக்குமூலம் பெற்று, என் பெயரை கெடுக்க முயற்சி நடக்கிறது. கூலிப்படையை சேர்ந்த சிலர், அரசியலில் என் வளர்ச்சியை பொறுக்காத சிலர் செய்த வேலை இது. கலைச்செல்வியே என்னை மிரட்டி வாக்குமூலம் வாங்கினார்கள் என, போலீசில் புகார் கொடுத்துள்ளார். ஆதாரமின்றி, என் பெயரை பயன்படுத்தி, வீடியோ பரப்பி செய்தி வெளியிடுவோர் மீது வழக்குப்போட உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

தனிப்படை போலீசார் கூறியதாவது: இடங்கணசாலை நகராட்சி தலைவர் பதவிக்கு, தி.மு.க., சார்பில் போட்டியிட முயன்றவர்கள் இடையே போட்டி ஏற்பட்டதே இப்பிரச்னைக்கு காரணம். செல்வம் பணம் பறித்தார் என, யாரும் புகார் அளிக்கவில்லை. புகார் அளித்தால் விசாரிக்கப்படும். ஏற்கனவே செல்வத்தின் தம்பியை மிரட்டியதாக, ரூபன் கைது செய்யப்பட்டுள்ளார். ரூபன் மீது கொலை உள்பட, ஐந்து வழக்குகள் நிலுவையில் உள்ளதோடு, மகுடஞ்சாவடி போலீஸ் ஸ்டேஷனின், ரவுடி பட்டியலில் இடம் பெற்றுள்ளார். தொடர்ந்து கலைச்செல்வியின் புகார் மீது விசாரணை நடக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

 

Advertisement
மேலும் சேலம் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X