எட்டு மாதங்களில் 84 பேர் 'சஸ்பெண்ட்': பரபரப்புக்கு பஞ்சமில்லா பதிவு துறை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஜன
2022
18:28

தி.மு.க., ஆட்சிக்கு வந்த எட்டே மாதங்களில், 84 அலுவலர்கள் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளதால், பதிவுத்துறை பரபரப்பாகி உள்ளது.

தமிழகத்தில், 575 சார் பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இவற்றில், சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பெரிய நகரங்களில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட சார் பதிவாளர் அலுவலகங்களில் பணியாற்ற பெரும் போட்டி நடப்பது வழக்கம். பத்தாண்டுகளில் பதிவுத்துறையில் லஞ்சமும், முறைகேடும் மிகவும் அதிகரித்துள்ளது. பதிவுத்துறையில் நடந்து வரும் முறைகேடுகளை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்படும் என, துறை அமைச்சர் மூர்த்தி சட்டசபையில் அறிவித்தார். அதன்படி, விசாரணை அடிப்படையில் பதிவுத்துறை அலுவலர்கள் பலரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டு வருகின்றனர். அ.தி.மு.க., ஆட்சியில் நடந்த பதிவு முறைகேடுகள் மட்டுமின்றி, இப்போது வந்துள்ள புகார்களிலும் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பல அலுவலகங்களுக்கு துறை அமைச்சரே நேரடியாக சென்று, மக்களிடமே விசாரணை நடத்தி பல அலுவலர்களை சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டார். ஆனால், நல்ல வருவாய் உள்ள இடங்களுக்கு பணி மாறுதல் வாங்குவதற்காக, அரசியல் செல்வாக்கை பயன்படுத்துவதும், கோடி ரூபாய் வரை பேரம் பேசி பணி மாறுதல் வாங்குவதும், இப்போதும் மாறவே இல்லை. முதல்வர், அமைச்சர், ஆளும்கட்சி நிர்வாகிகளுக்கு வேண்டியவர்கள் என்ற பெயரில், முறைகேடாக பதிவு செய்யுமாறு பதிவுத்துறை அலுவலர்களை மிரட்டுவதும், நிர்பந்திப்பதும் வழக்கம் போல தொடர்கிறது. இந்நிலையில், தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற எட்டு மாதங்களில், பதிவுத்துறையைச் சேர்ந்த 84 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பதாக துறை அலுவலர்கள் தெரிவிக்கின்றனர். இவர்களில், 22 பேர் மட்டுமே அ.தி.மு.க., ஆட்சியில் முறைகேடு செய்ததாக நடவடிக்கைக்கு உள்ளானவர்கள். மற்றவர்கள் இப்போது வந்த புகார் மற்றும் முறைகேடுகளுக்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

பதிவுத்துறை அலுவலர்கள் சிலர் கூறியதாவது: பதிவுத்துறை வரலாற்றிலேயே ஒரே நேரத்தில் இத்தனை மாவட்ட பதிவாளர்கள், சார் பதிவாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதில்லை. இதே துறையில், கோடிகளில் சம்பாதித்த பல அலுவலர்கள் இப்போதும் பசையான பதவிகளில் அமர்ந்திருக்கின்றனர். அவர்கள் மீது, நடவடிக்கை எடுக்காத வரையிலும், துறையில் முறைகேடுகளைத் தடுக்கவே முடியாது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது சிறப்பு நிருபர் -

 

Advertisement
மேலும் சேலம் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X