வாழப்பாடி அருகே பட்டப்பகலில் தலைமை ஆசிரியையிடம் சங்கிலி பறிப்பு | சேலம் செய்திகள் | Dinamalar
வாழப்பாடி அருகே பட்டப்பகலில் தலைமை ஆசிரியையிடம் சங்கிலி பறிப்பு
Added : ஜன 27, 2022 | |
Advertisement
 

வாழப்பாடி: பள்ளிக்கு கொடியேற்ற செல்ல, பஸ்சுக்கு காத்திருந்த தலைமை ஆசிரியையிடம், இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து தப்பிச் சென்றனர்.

சேலம் மாவட்டம், வாழப்பாடி அடுத்த, முத்தம்பட்டியை சேர்ந்த விவசாயி சண்முகம். இவரது மனைவி சாந்தா, 58. இவர், முடியனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணிபுரிகிறார். குடியரசு தினத்தையொட்டி, பள்ளியில் கொடியேற்றுவதற்காக, அங்கு செல்ல நேற்று காலை, 8:30 மணிக்கு முத்தம்பட்டி கேட் பஸ் ஸ்டாப்பில் பஸ்சுக்கு காத்திருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இரு மர்ம நபர்கள், சாந்தா அணிந்திருந்த, 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் தலைமறைவாகினர். இதுகுறித்து, வாழப்பாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்: ஆத்தூர், புதுப்பேட்டையை சேர்ந்தவர் மோகன்குமார், 35. இவரது மனைவி மோகனா, 32. இவர்கள், ஏத்தாப்பூரில் இருசக்கர வாகனத்தில், நேற்று மதியம், 2:00 மணிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர், மோகனா அணிந்திருந்த, 5 பவுன் தங்க சங்கிலியை பிடித்து இழுத்தனர். அதில், சங்கிலி அறுந்து ஒரு பகுதி மட்டும் மர்ம நபர்கள் கையில் சென்றது. பின், அவர்கள் வேகமாக சென்று தப்பினர். மோகனா புகார்படி, ஏத்தாப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் சேலம் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X