உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று முதல்! ஆரம்பம் சென்னை, தாம்பரம், ஆவடி மாநகராட்சிகளில் சுறுசுறுப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஜன
2022
22:46


சென்னை :சென்னை, ஆவடி தாம்பரம் மாநகராட்சி தேர்தலுக்கான மனுதாக்கல் இன்று துவங்குகிறது. தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள், உரிய ஆவணங்களுடன், 50 ஆயிரம் ரூபாய் வரை எடுத்து செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சென்னை மாநகர் முழுதும், 45 பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், அடுத்த மாதம் 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.

சென்னை மாநகராட்சியில் உள்ள, 200 வார்டுகளுக்கான வேட்பு மனு தாக்கல், அந்தந்த மண்டல அலுவலகங்களில் இன்று துவங்குகிறது. காலை, 10:00 மணி முதல், 5:00 மணி வரை மனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, 200 வார்டுகளுக்கும், 37 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு, அந்தந்த மண்டலங்களிலேயயே அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தாம்பரம், ஆவடி மாநகராட்சிகளிலும், தேர்தல் பணிகள் சூடுபிடித்துள்ளன.அந்தந்த மாநகராட்சிகளில், தேர்தல் நடத்தும் அதிகாரிகள் அதற்கேற்ப பணிகளை முடுக்கி விட்டுள்ளனர். பிரதான கட்சிகளும், வேட்பாளர் தேர்வில் இறுதி முடிவு எடுக்கும் முனைப்பில் செயல்பட்டு வருகின்றன. வேட்பாளர்களும் தயாராகி வருவதால், இன்று முதல் தேர்தல் களம் சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதலே நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால், பணம் மற்றும் பொருட்கள் எடுத்து செல்வதில் கடும் கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள், வியாபாரிகள் உரிய ஆவணங்களுடன், 50 ஆயிரம் ரூபாய் வரை எடுத்து அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் பணி மற்றும் தேர்தலுக்காக அமைக்கப்பட்டுள்ள பறக்கும் படை குழுவில் உள்ள அலுவலர்கள், காவலர்களுக்கான பயிற்சி கூட்டம், மாவட்ட தேர்தல் அலுவலரும், சென்னை மாநகராட்சி கமிஷனருமான ககன்தீப் சிங் பேடி தலைமையில், ரிப்பன் மாளிகையில் நேற்று நடந்தது. பின், பறக்கும்படை வாகனங்களை கமிஷனர் கொடியசைத்து துவக்கி வைத்தார். பணப்பட்டுவாடாவை தடுக்க, 45 பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

தேர்தல் ஆயத்த பணிகள் குறித்து, சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி கூறியதாவது:சென்னையில், உரிய ஆவணமின்றி, 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணமாகவும், 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள பொருட்கள் கொண்டு சென்றால் பறக்கும் படையினர் பறிமுதல் செய்வர். இதற்காக, மண்டலத்திற்கு, மூன்று குழுவினர் என, 45 பறக்கும் படையினர் சுழற்சி முறையில் சோதனையில் ஈடுபடுவர். இந்த குழுவில் உதவி செயற்பொறியாளர், இரண்டு காவலர்கள் மற்றும் ஒரு வீடியோ ஒளிப்பதிவாளர் உட்பட நான்கு பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து. மாதிரி நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. இந்த மாதிரி நடத்தை விதிகள், சென்னை மாநகராட்சிக்கு அருகில் உள்ள, 5 கி.மீ., சுற்றளவு வரையும் பொருந்தும்.இவ்வாறு அவர் கூறினார்


.செலவினஉச்ச வரம்பு

சென்னை மாநகராட்சியில் வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள், அதிகபட்சமாக, 90 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே செலவு செய்ய, மாநில தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ளது.சென்னையில் தேர்தல் தொடர்பாகன புகார்களை, 1800 425 7012 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம். இதற்காக, 24 மணி நேரமும் செயல்பட, 20 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், http://election.chennaicorporation.gov.in/gcculb22/complaints/ என்ற இணையதளம் வாயிலாகவும் புகார் தெரிவிக்கலாம்.


தேர்தல் நடத்தை விதிமுறைகள்

மாநகராட்சி தேர்தலை ஒட்டி, நடத்தை விதிகளில் கூறப்பட்டுள்ளதாவது: ஜாதி, சமூகம், மதம் அல்லது வெவ்வேறு மொழி பேசும் மக்களிடையே வெறுப்புணர்வை உருவாக்கும் வகையிலோ, சமூக உணர்வுகளை துாண்டும் வகையிலோ எவ்வித செயலிலும் ஈடுபடக்கூடாது.
* வழிபாடு தலங்களில் பிரசாரம் மேற்கொள்ளக்கூடாது.
* கட்சி, வேட்பாளர்களின் கொள்கை மற்றும் திட்டம் பற்றி மட்டுமே பிரசாரம் செய்யலாம். பொது வாழ்க்கை செயல்பாடுகளுக்கு தொடர்பில்லாத தனிப்பட்ட வாழ்க்கை குறித்து விமர்சிக்கக் கூடாது.
*வாக்காளர்களுக்கு எந்த வகையிலும், லஞ்சமோ, வெகுமதியோ கொடுத்தல் கூடாது. வாக்காளர்களை அச்சுறுத்தல், தேவையற்ற செல்வாக்கை அவரிடம் பயன்படுத்துதல், அவருடைய ஓட்டுரிமையில் தலையிடுதல் போன்ற செயல்களில் ஈடுபட கூடாது
* கூட்டங்களில் மதுபானங்கள், தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் வழங்குவது கூடாது அச்சகத்தின் பெயர் மற்றும் முகவரி குறிப்பிடாமல் நோட்டீஸ், துண்டு பிரசுரம் அச்சிடக்கக்கூடாது
*பொது கட்டடங்கள் மற்றும் தனியார் கட்டடங்களில் சுவரொட்டி ஓட்டுவது மற்றும் விளம்பரங்கள் எழுதுவது தடை செய்யப்பட்டுள்ளது.
* ஒலி பெருக்கிகள் பயன்படுத்த காலை 6:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படும்.
* உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல் மற்றும் தேர்தல் ஆணைய வழிகாட்டுதல் படி, கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி பிரசாரம் மேற்கொள்ள வேண்டும். ஒரு வேட்பாளர் தன்னுடன், அதிகபட்சமாக மூன்று ஆதரவாளர்களுடன் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும்.

 

Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X