அன்னூர்:அன்னூர் அருகே தாயை கட்டையால் தாக்கிய மகன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.ருத்திரியம்பாளையத்தைச் சேர்ந்தவர் மரகதம், 42. இவரது மகன் ஞானபிரகாஷ், 23. டிராக்டர் டிரைவர்.நேற்று முன்தினம் இரவு ஞானபிரகாஷ் குடித்துவிட்டு வந்து, எனக்கு ஏன் திருமணம் செய்து வைக்கவில்லை என்று கேட்டு தகராறு செய்து, அரிவாள்மனை கட்டையால், தாயை சரமாரியாக தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார். ரத்த காயம் அடைந்த மரகதம், அன்னூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.இதுகுறித்த புகாரின் பேரில், அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஞானப்பிரகாசத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.