மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் நகராட்சியில் மொத்தம், 33 வார்டுகள் உள்ளன. இதில் கடந்த முறை நடந்த நகராட்சி தேர்தலில் ஐந்து வார்டுகளில் காங்., வெற்றி பெற்றது. எனவே, வரும் தேர்தலில் 8 வார்டுகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என, காங்., கோரியுள்ளது. இந்நிலையில், காங்கிரசுக்கு5 வார்டுகள் வழங்குமா அல்லது கூடுதலாக வழங்குமா என தி.மு.க., வின் நிலை குறித்த ஆவல், இரு கட்சியினரிடையே எழுந்துள்ளது.