3 மாநகராட்சிகளில் சூடுபிடித்தது தேர்தல் பணி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஜன
2022
22:56

மாநகராட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து, சென்னை, தாம்பரம், ஆவடி மாநகராட்சிகளில், தனியார் மற்றும் பொது சுவர்களில் ஒட்டப்பட்டிருந்த கட்சி போஸ்டர்கள் கிழிக்கப்பட்டு, சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டன. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், அடுத்த மாதம் 19ல் நடக்கவுள்ளது. இதையடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால், சுவர்களில் அரசியல் கட்சிகள் சார்பில் வரையப்பட்டிருந்த விளம்பரங்கள் வண்ணம் பூசி அழிக்கப்பட்டன. போஸ்டர்கள் கிழிக்கப்பட்டதுடன், பேனர்களும் அகற்றப்பட்டன. தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில், சுவர்களில் எழுதப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் விளம்பரங்களை அழிக்கும் பணியில், மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். நேற்று, ஜி.எஸ்.டி., சாலையோரம் இருந்த விளம்பரங்களை அழித்தனர். ஆவடி மாநகராட்சியிலும் இதே போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதிகாரிகள் ஆய்வுஓட்டுச்சாவடிகளில் செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து, அதிகாரிகள் ஆய்வு செய்தனர். முதற்கட்டமாக, சாய்வு தளம் அமைத்தல், பெரிய வகுப்பறையாக இருந்தால், இரு ஓட்டுச்சாவடியாக பிரித்தல், ஓட்டுச்சாவடிக்குள் வெளி நபர்கள் எட்டி பார்க்க முடியாத அளவுக்கு ஜன்னல், ஓட்டைகளை அடைத்தல் போன்ற பணிகள் நடைபெற உள்ளன.அடுத்த கட்டமாக, மின் இணைப்பு ஆய்வு, தேவையான மின்விளக்குகள், மின்விசிறிகள் அமைத்தல், பதற்றமான ஓட்டுச்சாவடிகளில் கேமரா அமைத்தல் போன்ற பணிகள் நடைபெற உள்ளன.ஓட்டுப்பதிவு நாளன்று, என்னென்ன வசதிகள் இருக்க வேண்டுமோ, அதற்கு ஏற்ப, கட்டமைப்பு வசதிகள் செய்யப்படும் என, மாநகராட்சி அதிகாரிகள் கூறினர்.கள்ளச்சந்தையில் மது அம்பத்துார், கொரட்டூர், திருவேற்காடு, மாதவரம், புழல், செங்குன்றம் சுற்றுவட்டாரங்களில், 24 மணி நேரமும், கள்ளச்சந்தையில் மது விற்பனை நடப்பது வழக்கம். மது விலக்கு போலீசாரும், அதை கண்டுகொள்வதில்லை. தற்போது, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளதால், வேட்பாளர்கள், தங்கள் ஆதரவாளர்களை குஷிபடுத்த, அதிக அளவில் மது வகைகளை வாங்கி வினியோகிப்பர். இதனால், வழக்கத்தை விட, வரும் நாட்களில் குற்றச்சம்பவங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். இதனால், ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், மது விற்பனையை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. அதே போல், தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளிலும் கள்ள மது விற்பனையை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துஉள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்திற்குட்பட்ட, திருவேற்காடு நகராட்சியில், சிவன் கோவில் சாலை, மாநகர பஸ் நிலையம், கோலடி சாலை உள்ளிட்ட பகுதிகளில், அரசு மற்றும் தனியார் சுவர்களில் இருந்த, அரசியல் கட்சிகளின் விளம்பரங்களை அழிக்கும் பணியை, நகராட்சி நிர்வாகம், நேற்று மாலை துவக்கியது. இதையடுத்து, நகராட்சியின் மற்ற பகுதியிலும், சுவர் விளம்பரம் மற்றும் பேனர்களை அகற்றும் பணி தொடரும் என, நகாரட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.எம்.எல்.ஏ., அலுவலகங்களுக்கு 'சீல்'சென்னை மாநகராட்சி எல்லையில், மூன்று எம்.பி.,க்கள் அலுவலகங்கள் மற்றும் 16 எம்.எல்.ஏ., அலுவலகங்கள் உள்ளன. மேலும், புறநகர் பகுதியிலும், இதே போல், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் அலுவலகங்கள் உள்ளன.தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக, சென்னை மாநகராட்சி எல்லையில் உள்ள எம்.பி.,க்கள், - எம்.எல்.ஏ.,க்கள் அலுவலகங்களை, மாநகராட்சி ஊழியர்கள், 'மூடி' சீல் வைத்தனர். இது குறித்த தகவல், சம்பந்தப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு முன்பே தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், புறநகர் பகுதியில் உள்ள அலுவலகங்களையும், அங்குள்ள உள்ளாட்சி அமைப்பு ஊழியர்கள் மூடினர்.
- நமது நிருபர் குழு -

 

Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X