தி.மு.க.,வில் போட்டியிட விருப்ப மனு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஜன
2022
22:58

தாம்பரம் மாநகராட்சியில் அடங்கிய, தாம்பரம் நகரத்தில், தி.மு.க., சார்பில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்தவர்களிடம், வேட்பாளர் தேர்வுக்கான நேர்காணல் நேற்று நடந்தது.தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட, தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட, தாம்பரம் நகரத்தில் அடங்கிய, 18 வார்டுகளில் தி.மு.க., சார்பில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்தவர்களிடம், வேட்பாளர் தேர்வுக்கான நேர்காணல், நேற்று காலை, தாம்பரத்தில் நடத்தப்பட்டது.ஊரக தொழில் துறை அமைச்சர் அன்பரசன் மற்றும் தாம்பரம் தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., ராஜா ஆகியோர் தலைமையில் நடந்த நேர்காணலில், 18 வார்டுகளிலும், விருப்ப மனு தாக்கல் செய்தவர்களை, தனித்தனியாக அழைத்து, நேர்காணல் நடத்தப்பட்டது. நேர்காணலில், உங்களுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதா, எவ்வளவு செலவு செய்வீர்கள், யாரை போட்டியிட வைத்தால் வெற்றி கிடைக்கும் போன்ற கேள்விகள் கேட்கப்பட்டன. குறிப்பாக, எவ்வளவு செலவு செய்வீர்கள் என்ற கேள்வியே பிரதானமாக இடம் பெற்றதாக தகவல் வெளியாகிஉள்ளது. தொடர்ந்து, பெருங்களத்துார், பீர்க்கன்காரணை, செம்பாக்கம், மாடம்பாக்கம் பகுதிகளுக்கான, நேர்காணல், நேற்று மாலை மாடம்பாக்கத்தில் நடந்தது. அங்கும், தி.மு.க., வினர் மேற்கண்ட பாணியிலேயே நேர்காணல் நடத்தியதாக நேர்காணலில் பங்கேற்ற சிலர் அதிருப்தி தெரிவித்தனர். கட்சிக்காக பல காலம் உழைத்தவர்களை புறந்தள்ளி, 'நோட்டுக்கு சீட்' என்ற வகையில் கட்சி மேலிடம் செயல்படுவதாக, வாய்ப்பு கேட்டு விண்ணப்பித்த சிலர் புலம்பி தள்ளினர்.

 

Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X