விம்கோ நகர் 'மெட்ரோ' பணிமனை இரு நிலையங்கள் மார்ச்சில் திறக்க ஏற்பாடு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஜன
2022
23:02

விம்கோ நகர் 'மெட்ரோ' பணிமனை மற்றும் இரண்டு நிலையங்கள், வரும் மார்ச் மாதத்திற்குள் திறக்க, பணிகள் துரிதப்படுத்தப்பட்டு உள்ளன.சென்னை மெட்ரோ ரயில் முதல் திட்டத்தில், வண்ணாரப்பேட்டை - திருவொற்றியூர் விம்கோநகர் இடையே, 9.1 கி.மீ., மெட்ரோ பாதை அமைக்கப்பட்டு, 2021 பிப்., 14ல் இருந்து இயக்கப்பட்டு வருகிறது.இப்பாதையில், காலடிப்பேட்டை - திருவொற்றியூர் நிலையங்கள் இடையே உள்ள திருவொற்றியூர் தேரடி நிலையம், விம்கோநகர் பணிமனை மற்றும் மெட்ரோ நிலையம் கட்டுமான பணிகள் முடிக்கப்படவில்லை. இதனால், வண்ணாரப்பேட்டை - விம்கோ நகர் இடையே மட்டும் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது.விம்கோ நகர் பணிமனையில் நிறுத்தி வைக்க வேண்டிய மெட்ரோ ரயில்கள், கோயம்பேடு தலைமை மெட்ரோ பணிமனையில் நிறுத்தி வைக்கப்படுகின்றன.வண்ணாரப்பேட்டை - விம்கோ நகர் மெட்ரோ ரயில் போக்குவரத்து துவக்கப்பட்டபோது, 'அடுத்த ஆறு மாதங்களில், திருவொற்றியூர் தேரடி, விம்கோ நகர் பணிமனை ரயில் நிலையங்கள் கட்டுமான பணி முடிந்து திறக்கப்படும். 'கடந்த 2021 டிசம்பருக்குள் விம்கோ நகர் பணிமனை பணி முடித்து திறக்கப்படும்' என, அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டது.ஆனால், கொரோனா ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால், திட்டமிட்டபடி பணிகள் முடிக்கப்படவில்லை. இந்நிலையங்கள் மற்றும் பணிமனை கட்டுமான பணிகள் குறித்து, மெட்ரோ ரயில் திட்ட அதிகாரி கூறியதாவது:கொரோனா தாக்கம் மற்றும் வேலை ஆட்கள் பற்றாக்குறையால், கட்டுமான பணிகளை திட்டமிட்டபடி முடிக்க முடியவில்லை. பணிகள் தொடர்ந்து நடக்கின்றன. திருவொற்றியூர் தேரடி, விம்கோ நகர் பணிமனை மெட்ரோ நிலையங்களில் 70 சதவீத கட்டுமான பணிகள் முடிந்துள்ளன. ரயில் தண்டவாளங்கள் அமைக்கும் பணி முடிந்து, இணைப்பு பணிகள் நடந்து வருகின்றன.இத்துடன், மின்மயமாக்கும் பணிக்கு மின் கம்பங்கள் நிறுவும் பணிகளும், மின் வழித்தடங்கள் இணைப்பு பணிகளும் நடக்கின்றன.பணிகள் துரிதமாக்கப்பட்டுள்ளதால், மார்ச் இரண்டாவது வாரத்துக்குள் பணிகள் முடிக்கப்பட்டு, ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் சோதனை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -

 

Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X