சென்னை : தாம்பரம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு ௧௨ உதவி கமிஷனர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்ட, குற்ற ஆவண காப்பக பிரிவு டி.எஸ்.பி., ஜெயராஜ், தாம்பரம் கமிஷனர் அலுவலக குற்ற ஆவண பிரிவுக்கு மாற்றப்பட்டார். டி.ஜி.பி., அலுவலக போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு பிரிவு டி.எஸ்.பி., ரவிகுமரன், தாம்பரம் கமிஷனரகத்தின் கேளம்பாக்கம் உதவி கமிஷனராக மாற்றப்பட்டார். சென்னை போலீசில் உளவுத்துறை உதவி கமிஷனரான வெற்றிச்செழியன், தாம்பரம் கமிஷனர் அலுவலகத்தில், அதே பிரிவுக்கு மாற்றப்பட்டார். சென்னை பொருளாதார குற்றப்பிரிவு டி.எஸ்.பி., ரியாசுதீன், தாம்பரம் கமிஷனரகத்தின் செம்மஞ்சேரி உதவி கமிஷனராக மாற்றப்பட்டார்.தாம்பரம் கமிஷனர் அலுவலகத்தின் கீழ், சேலையூர் கொண்டு வரப்பட்டுள்ளதால், அங்கு உதவி கமிஷனராக பணிபுரியும் முருகேசன் அதே பொறுப்பில் நீடிக்கிறார். சென்னை மத்திய குற்றப்பிரிவில் பணிபுரியும் கருணாகரன், தாம்பரம் கமிஷனர் அலுவலக, மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டார்.செங்கல்பட்டு மாவட்டம், வண்டலுார் டி.எஸ்.பி., சிங்கராவேலு, கூடுவாஞ்சேரி உதவி கமிஷனராக நியமிக்கப்பட்டார். தாம்பரம் உதவி கமிஷனர் சீனிவாசன், பல்லாவரம் உதவி கமிஷனர் ஆரோக்கிய பிரகாசம் ஆகியோர், அதே பொறுப்பில் நீடிக்கின்றனர்.டி.ஜி.பி., அலுவலக, காவல் கட்டுப்பாட்டு அறை டி.எஸ்.பி., சவரிநாதன், தாம்பரம் கமிஷனர் அலுவலகத்தின் மக்கள் தொடர்பு உதவி கமிஷனராக பணியமர்த்தப்பட்டு உள்ளார்.சென்னை போலீசின், துரைப்பாக்கம் உதவி கமிஷனராக பணிபுரியும் ரவி, தாம்பரம் கமிஷனர் அலுவலகத்தின் மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டார்.செங்கல்பட்டு மாவட்ட டி.எஸ்.பி., ரவிச்சந்திரன், தாம்பரம் கமிஷனர் அலுவலகத்தின், மணிமங்கலம் உதவி கமிஷனராக நியமிக்கப்பட்டார்.விழுப்புரம் மாவட்ட, நில அபகரிப்பு தடுப்பு பிரிவு டி.எஸ்.பி., வெங்கடேசன், அரியலுார் மாவட்ட, சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவுக்கு மாற்றப்பட்டார். வேலுார் மாவட்ட, நில அபகரிப்பு தடுப்பு பிரிவு டி.எஸ்.பி., கண்ணன், சென்னையில் பொருளாதார குற்றப்பிரிவு, தலைமை இடத்திற்கு மாற்றப்பட்டார்.இதற்கான உத்தரவை, நேற்று முன்தினம் டி.ஜி.பி., சைலேந்திரபாபு பிறப்பித்துள்ளார்.