ஸ்ரீபெரும்புதுார் : படப்பை அருகே, நெடுஞ்சாலையில் படுத்திருந்த 10 பசு மாடுகள், கனரக வாகனம் மோதியதில் நசுங்கி இறந்தன.படப்பை அருகே வஞ்சுவாஞ்சேரி பகுதியில், வண்டலுார் - -வாலாஜாபாத் நெடுஞ்சாலையில், நேற்று 15க்கும் மேற்பட்ட மாடுகள் படுத்திருந்தன. நேற்று அதிகாலை, அடையாளம் தெரியாத கனரக வாகனம் மோதியதில், 10 பசு மாடுகள் உடல் நசுங்கி, அதே இடத்திலேயே இறந்தன. இறந்த மாடுகளை, அப்பகுதி மக்கள் சாலையில் இருந்து அகற்றினர். மணிமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.'சாலையில் மாடுகள் திரிந்தால், அதன் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, அதிகாரிகள் கூறுவதற்கு இது போன்ற சம்பவமும் ஒரு காரணம். உரிமையாளர்கள், வீடுகளிலேயே, கால்நடைகளை வளர்க்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.