அபிராமபுரம் : புறா வளர்ப்பதில் ஏற்பட்ட தகராறில், தாய் மாமனை கொலை செய்த நபர் உட்பட, இருவரை போலீசார் கைது செய்தனர். சென்னை ஆர்.ஏ.புரம், குட்டி கிராமணி தோட்டத்தைச் சேர்ந்தவர் சதீஷ், 34. மது பழக்கத்திற்கு அடிமையான இவர், ஐந்து மாதங்களாக மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்தார். சில தினங்களுக்கு முன் சிகிச்சை முடிந்து வீட்டிற்கு திரும்பினார்.அவருக்கும், அவரது அக்கா மகன் ரஞ்சித், 20, என்பவருக்கும், புறா வளர்ப்பதில் ஏற்கனவே முன்விரோதம் இருந்து உள்ளது.நேற்று முன்தினம் இரவு ரஞ்சித் மற்றும் அவரது நண்பர் ஹரிஹரன், 19, ஆகிய இருவரும் சேர்ந்து, சதீஷை கத்தியால் குத்தி கொலை செய்து அங்கிருந்து தப்பினர்.இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், மேற்கண்ட இருவரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து கத்தியை பறிமுதல் செய்தனர்.