சென்னை, : -பெரும்பாக்கம், கிருஷ்ணா நகர் நலச்சங்கம் சார்பில், குடியரசு தினத்தையொட்டி, 150 மரக்கன்றுகள் நடப்பட்டன.சென்னை, பெரும்பாக்கம் ஊராட்சியில் கிருஷ்ணாநகர் அமைந்துள்ளது. அந்நகரில், பல தெருக்களும், நுாற்றுக்கணக்கான குடும்பங்களும் வசித்து வருகின்றன.அந்நகர், நலச்சங்கத்தின் சார்பில், நகர் வாசிகளின் சுகாதாரம், ஆரோக்கியம் உள்ளிட்ட அம்சங்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அதன் ஒரு பகுதியாக, குடியரசு தினத்தையொட்டி, 150 மரக்கன்றுகள் பெரும்பாக்கம் பகுதியின் பல்வேறு இடங்களில் நடப்பட்டன.