மாநகராட்சி கவுன்சிலர் சீட் பெற ரூ.25 லட்சம்! தி.மு.க.,வில் துவங்கியது பேரம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஜன
2022
00:29

மதுரை : 'மதுரையில் மாநகராட்சி கவுன்சிலர் சீட்டிற்கு குறைந்தபட்சம் ரூ.25 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதை வெளியே சொல்ல முடியாமல் தவிக்கிறோம்' என தி.மு.க., சீனியர் நிர்வாகிகள் புலம்புகின்றனர்.



தி.மு.க., நிர்வாகிகள் 10 ஆண்டுகளாக 'பதவிக் கனவு'வில் உள்ளனர். தற்போது ஒரு வாய்ப்பாக நகர்புற உள்ளாட்சி தேர்தல் அமைந்துள்ளது. மாநகராட்சி 100 வார்டுகளில் 25 ஐ கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கிவிட்டு 75ஐ கைப்பற்ற கணக்கு போட்டுள்ளனர். கட்சிக்காக உழைத்தவர்கள், பணப் பலம் உள்ளவர்கள் கவுன்சிலர் 'சீட்' பெற முயற்சித்து வருகின்றனர். .

நகர் வடக்கு, தெற்கு, வடக்கு மாவட்டம், தெற்கு மாவட்டம் என நான்கு மாவட்டங்களில் இரண்டில் கவுன்சிலர் சீட்டுக்கு ஏக 'டிமாண்ட்' இருப்பதால் 'பேரம்' நடக்கிறது.குறைந்த பட்சம் ஒரு மாவட்டத்தில் ரூ.25 லட்சம் முதலும், மற்றொரு மாவட்டத்தில் ரூ.30 லட்சம் முதலும் பணப் பலம் உள்ளவர்களிடம் மட்டும் கவுன்சிலர் சீட்டுக்கு வசூல் துவங்கியுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

நிர்வாகிகள் கூறியதாவது:மாநிலத்தில் ஆட்சி அமைந்தவுடன் கொரோனா தொற்றுடன் போராடவே காலம் கடந்து விட்டது. கட்சியால் ஒரு 'பயனும்' இல்லாத நேரத்தில் இந்த மாநகராட்சி தேர்தலிலாவது ஒரு பதவியை பெற்றுவிட வேண்டும் என பலர் காய் நகர்த்துகிறோம். ஆனால் பணப் பலம் உள்ளவர்களுக்கு சீட்டு உறுதி என்கின்றனர். அவர்களுக்கு சில ஒதுக்கினாலும் கட்சிக்கு உழைத்தவர்களுக்காகவும் சீட்டு ஒதுக்கினால் தான் கட்சி மீது தொண்டர்களுக்கு நம்பிக்கை ஏற்படும்.

ஆனால் அவ்வாறு நடக்குமா என சந்தேகமாக உள்ளது. மதுரையில் நடப்பதை பார்த்து சீனியர் நிர்வாகிகளாக இருந்தும் வெளியே சொல்ல முடியாமல் தவிக்கிறோம். ஆகையால் மாநகராட்சி தோறும் ஒரு தி.மு.க., எம்.பி.,க்களை உட்கட்சி பார்வையாளராக கட்சி தலைமை நியமித்து தேர்தலை கண்காணிக்க வேண்டும். அவர்கள் மாவட்ட செயலாளர்களுடன் இணைந்து கட்சிக்கு உழைத்தவர்களை கண்டுபிடித்து வேட்பாளர்கள் வாய்ப்பு வழங்க வேண்டும் என்றனர்.

 

Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raghavan - Srirangam, Trichy,இந்தியா
28-ஜன-202218:24:52 IST Report Abuse
raghavan இப்படி வசூல் பண்ணா ஜெயிச்சப்புறம் அவன் போயி நிக்குற முதலிடம் ரேஷன் கடைதான்.
Rate this:
Cancel
Charles - Burnaby,கனடா
28-ஜன-202207:49:15 IST Report Abuse
Charles இது போல் செய்யும் பேரம் தான், ஊழலுக்கு முதல் படி இப்படி வசூலிக்கும் பணத்தை, கொடுத்தவர்கள் எப்படி மீட்க முடியம் ஊழல் செய்வதை தவிர//
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X