பெரம்பலுார்:பெரம்பலுார் அருகே, வீட்டு கூரையில், துப்பாக்கி தோட்டா கண்டெடுக்கப் பட்டதை தொடர்ந்து, படைத் தளத்தை அசட்டையாக கையாண்டதாக, ஆர்.பி.எப்., எனும் மத்திய ரயில்வே பாதுகாப்பு படை மீது, பாடாலுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
பெரம்பலுார் மாவட்டம், நாரணமங்கலம் கிராமத்தில் உள்ள துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தில், திருச்சி சரகத்துக்கு உட்பட்ட போலீசாருக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கப்படும்.பயிற்சி மையத்தில் இருந்து, 2 கி.மீ.,யில் உள்ள ஈச்சங்காடு கிராமத்தை சேர்ந்த விவசாயி சுப்ரமணி என்பவரது வீட்டின் ஆஸ்பெஸ்டாஸ் கூரையில், கடந்த 25, 26ல் தலா ஒரு துப்பாக்கி தோட்டா கிடந்தது.
பாடாலுார் போலீசார் விசாரித்தனர்.இது குறித்து, வி.ஏ.ஓ., நாராயணன் புகார்படி, திருச்சி மத்திய ரயில்வே பாதுகாப்பு படை மீது, படைத்தளத்தை அசட்டையாக கையாளுதல் பிரிவில், பாடாலுார் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் வழக்கு பதிந்து விசாரிக்கிறார்.