கோவை:வேளாண் பல்கலை தரவரிசை பட்டியல், இன்று வெளியிடப்படுகிறது.கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலை கீழ், 18 உறுப்பு கல்லுாரிகள், 28 இணைப்பு கல்லுாரிகள் செயல்படுகின்றன. இதில், 12 இளங்கலை பட்டப்படிப்புகள் வழங்கப்படுகின்றன.முதலாமாண்டு சேர்க்கை விண்ணப்பங்கள், 2021 செப்., 8 முதல் பெறப்படுகின்றன. மொத்தம், 50 ஆயிரத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், வன்னியர் இடஒதுக்கீடு பிரச்னையால் பல்கலையில் தரவரிசைப்பட்டியல் வெளியிடுவது ஒத்தி வைக்கப்பட்டது.இன்று தரவரிசைப்பட்டியல் வெளியிடப்பட உள்ளதாக, பல்கலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.பிப்., 11 முதல் கவுன்சிலிங் நடக்க உள்ளது.செயல் துணைவேந்தர் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில்,''நாளை(இன்று) காலை, 10:00 மணிக்கு தரவரிசைப்பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இதில் முதல், 10 இடங்களை பிடித்த மாணவர்களின் பட்டியல் வெளியிடப்படும். அனைவரும் தரவரிசைப் பட்டியலை பெற வசதி செய்யப்பட்டுள்ளது,'' என்றார்.