கூடுவாஞ்சேரி :கூடுவாஞ்சேரி அடுத்த பொத்தேரியில் உள்ள எஸ்.ஆர்.எம்., மருத்துவமனையில், சலுகை கட்டணத்தில் பொதுமக்கள் மருத்துவ சிகிச்சை பெறும் வகையில், புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம் - கூடுவாஞ்சேரி அடுத்த காட்டாங்கொளத்துார் எஸ்.ஆர்.எம்., மருத்துவமனையில், சலுகை கட்டணத்தில் பொதுமக்கள் சிகிச்சை பெற வசதியாக 'வள்ளி ஹெல்த் கார்டு' திட்டத்தை, மருத்துவமனை நிர்வாகம், நேற்று அறிமுகம் செய்தது.எஸ்.ஆர்.எம்., மருத்துவ கல்லுாரி மருத்துவமனை இணை துணைவேந்தர் லெப்டினென்ட் கர்னல் டாக்டர் ரவிகுமார் தலைமை வகித்தார். 'டீன்' டாக்டர் சுந்தரம் முன்னிலை வகித்தர்.இணை துணைவேந்தர் லெப்டினென்ட் கர்னல் டாக்டர் ரவிகுமார், 'வள்ளி ஹெல்த் கார்டு' திட்டத்தை அறிமுகப்படுத்தினார். கல்வி நிறுவன ஊழியர்கள் பத்து பேருக்கு, ஹெல்த் கார்டு வழங்கினார்.