வில்லிவாக்கம், : அண்ணா நகர் மண்டலத்தில், முக்கிய சாலைகளின் சென்டர் மீடியனில் வண்ணம் பூசும் பணி தீவிரமாக நடக்கிறது.சென்னையை அழகு படுத்தும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளை, சென்னை மாநகராட்சி எடுத்து வருகிறது.குறிப்பாக, 'சிங்கார சென்னை 2.0' திட்டத்தின் கீழ், சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான கட்டடங்கள், கழிப்பறைகளில் பாரம்பரியம், கலாசாரம், பண்பாடு கலைகள் விழிப்புணர்வை பிரதிபலிக்கும் வகையில், சுவர் ஓவியங்கள் வரையப்பட்டு வருகின்றன.அந்த வரிசையில், சென்னையில் பஸ் சாலைகள் உட்பட முக்கிய சாலைகளை அழகுபடுத்தும் வகையில், சாலையின் தடுப்புகளில் வண்ணம் பூசும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.அண்ணா நகர் மண்டலத்திற்கு உட்பட்ட 40க்கும் மேற்பட்ட முக்கிய சாலைகளின் சென்டர் மீடியன்களில் வண்ணம் பூசும் பணிகள் நடக்கின்றன.