சாலையில் திரிந்த பசு மாடு பிடிக்கும் போது மடி அறுந்தது
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஜன
2022
22:44

ஆதம்பாக்கம் மாநகராட்சி சுகாதாரத் துறையினர், சாலையில் திரிந்த பசு மாட்டை பிடித்து வாகனத்தில் ஏற்றும் போது, மடி அறுந்து ரத்தம் வடிந்தது.இதை கண்டித்து, மாடு வளர்ப்பவர்கள் ஆலந்துார் மண்டல அலுவலகம் முன் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.சென்னை மாநகராட்சியில் சாலையில் மாடுகளை திரிய விடுவது குறித்து, தொடர் புகார்கள் வந்தன
.இதையடுத்து, சாலையில் திரியும் மாடுகளை பிடித்து அபராதம் விதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.இந்நிலையில், ஆலந்துார் மண்டலம் ஆதம்பாக்கம், கேசரி நகர், தாமிரபரணி தெருவில் சுகாதார ஆய்வாளர் பிரியா தலைமையில், சாலையில் திரிந்த பசு மாடு ஒன்றை பிடித்து, வாகனத்தில் ஏற்ற முயன்றனர்.அப்போது, வாகனத்தில் இருந்த தகரம் கிழித்து, மாட்டின் மடி அறுந்தது. ஏழு மாதம் கருவுற்றிருந்த மாட்டிற்கு ரத்தம் அதிகமாக வெளியேறியதால், வலியால் துடித்தது.
இதைக் கண்டு, மாட்டின் உரிமையாளர் ஜெகதீஸ்வரன், சுகாதாரத் துறையினருடன் தகராறில் ஈடுபட்டார்.பின், ஆலந்துார் ஆதார மீட்பு மையத்தில் மாட்டிற்கு முதலுதவி அளித்து, மேல் சிகிச்சைக்காக வேப்பேரி கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.இத்தகவல் அறிந்து, மாடு வளர்க்கும் சங்கத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர், ஆலந்துார் மண்டல அலுவலகம் முன் ஒன்று கூடி, மண்டல சுகாதாரத்துறை அலுவலர் சுதாவிடம் கோரிக்கை மனு அளித்தனர்.மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:ஆதம்பாக்கம் பகுதியில், 2,000 மாடுகள் வளர்க்கப்படுகின்றன. சாலையில் திரியாமல் வளர்க்க, ஏரிக்கரை பகுதியில் தொழுவம் அமைக்க வேண்டும்.பிரதான சாலையில் சுற்றித் திரியும் மாடுகளை மட்டுமே பிடிக்க வேண்டும். வீடுகளில் வழங்கும் உணவுகளை உண்ணும் மாடுகளை பிடிக்க வேண்டாம். பாதிக்கப்பட்ட மாட்டிற்கு பூரண சிகிச்சை அளிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இதை பரிசீலனை செய்வதாகக் கூறிய மண்டல சுகாதார அலுவலர் சுதா, 'பிரதான சாலைகளில் மாடுகளை திரியவிடக் கூடாது' என எச்சரித்தார். இந்த சம்பவத்தால், ஆலந்துார் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

 

Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X