திருவள்ளூர், :திருவள்ளூர் மாவட்டம், தமிழ்நாடு சிறப்பு காவல் 13ம் அணியில், கழிவு செய்யப்பட்ட, இரண்டு, நான்கு சக்கர வாகனங்கள், உடைக்க தகுதி உள்ளவற்றை, வரும், பிப்.11ம் தேதி, காலை 9:00 மணியளவில், ஆவடி வைஷ்ணவி நகரில் ஏலம் விடப்பட உள்ளது.வாகனங்களை ஏலம் கேட்க வருவோர், நுழைவு கட்டணமாக 500 ரூபாய் செலுத்த வேண்டும். ஏலத் தொகையுடன், இருசக்கர வாகனத்திற்கு, 12 சதவீதம்; நான்கு சக்கர வாகனத்திற்கு, 18 சதவீதம் விற்பனை வரி செலுத்த வேண்டும்.விபரங்களுக்கு, தமிழ்நாடு சிறப்பு காவல், 13ம் அணி போக்குவரத்து ஆய்வாளர் கே. ரவி, 94981 14228, உதவி ஆய்வாளர், ஏ.இர்பான், 94981 13122 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.