போளிவாக்கம் : போளிவாக்கம் ஊராட்சி பகுதியில், பூட்டிய வீட்டில் நகை, பணம் திருடு போனது குறித்து மணவாள நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
கடம்பத்துார் ஒன்றியம், போளிவாக்கம் ஊராட்சிக்குட்பட்ட பாக்குபேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர் மகன் கிரண்குமார், 32. இவர், கடந்த 26ம் தேதி மனைவி கிருத்திகா, 27, மற்றும் நான்கு வயது மகளுடன், ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள தன் பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.பின், நேற்றுமுன்தினம் மதியம் வீட்டிற்கு வந்து முன்பக்க கதவை திறக்க முயன்ற போது முடியவில்லை. பின் வீட்டின் பின்புறம் சென்று பார்த்த போது பின்புற கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டார்.
பின் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் படுக்கறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதலிருந்து ஐந்து தங்க மோதிரங்கள், மூன்று ஜோடி கம்மல்கள், வெள்ளி பாத்திரங்கள், 4,000 ரூபாய் பணம் என, மொத்தம் ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் திருடு போனது தெரிந்தது.இதுகுறித்து கிரண்குமார் அளித்த புகாரையடுத்து, மணவாள நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.