நகராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்வு; தி.மு.க., -- அ.தி.மு.க., சுறுசுறுப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஜன
2022
23:15

திருத்தணி : திருத்தணி நகராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் தயாரிப்பதில் தி.மு.க., அ.தி.மு.க., வினர் மும்மரமாக ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல், பிப்.,19ம் தேதி, ஒரே கட்டமாக நடைபெறுகிறது. வேட்பு மனு தாக்கல் நேற்று துவங்கி, பிப்.4ம் தேதி வரை நடக்கிறது.அதை தொடர்ந்து, பிப்.5 ம் தேதி வேட்பு மனு பரிசீலனை, 7ம் தேதி வேட்பு வாபஸ் பெறுவதற்கு கடைசி நாளாகும். பிப்., 22ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளன.

திருத்தணி நகராட்சியில், 21 வார்டுகளுக்கு, 42 ஓட்டுச்சாவடிகளில் தேர்தல் நடைபெறுகிறது. இதில் 18,070 ஆண்கள், 19,393 பெண்கள், 8 இதரர் என, மொத்தம் 37,471 வாக்காளர் ஓட்டளிக்க உள்ளனர்.இந்த நிலையில், 21 வார்டுகளிலும், தி.மு.க., அ.தி.மு.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் தயாரிக்கும் பணியில் இரு கட்சி மாவட்ட செயலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.தி.மு.க., கடந்த வாரமே, விருப்ப மனு கொடுத்தவர்களிடம், மாவட்ட பொறுப்பாளர் எம்.பூபதி, திருத்தணி எம்.எல்.ஏ.,சந்திரன் ஆகியோர் நேர்காணல் நடத்தி, தற்போது போட்டியிடும் வேட்பாளர் பெயர் பட்டியல் தயார் செய்துள்ளனர்.

அதே போல், அ.தி.மு.க. மாவட்ட செயலர் ரமணா தலைமையில், அ.தி.மு.க.,வில் விருப்ப மனு கொடுத்தவர்களிடம் நேற்று நேர்காணல் நடத்தப்பட்டு வேட்பாளர் பட்டியல் தயாரிக்கும் பணியில் கட்சி முக்கிய நிர்வாகிகள் மும்முரமாக உள்ளனர்.நேற்று, நகராட்சி அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் துவங்கியது.

ஏழு வார்டுக்கு ஒரு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் வீதம் மொத்தம் மூன்று பேர் நியமித்து, அலுவலகத்தில் வேட்பு மனு பெற தயாராக இருந்தனர். ஆனால் நேற்று யாரும் வேட்பு மனு தாக்கல் செய்ய வரவில்லை. இன்று, சனிக்கிழமையும் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதால், இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X