காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் சித்ரகுப்தர் கோவில் அருகில், பக்தர்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய வேண்டும் என, இந்திய தேசிய கிராம தொழிலாளர் சம்மேளன, காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் அவளூர் ஜி.சீனிவாசன், தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு விபரம்:
காஞ்சிபுரம் பஸ் நிலையம் அருகில் பிரசித்திபெற்ற சித்ரகுப்தர் கோவில் உள்ளது. பரிகார தலமான இக்கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி, வெளியூர், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராள மான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.இக்கோவிலுக்கு அருகில் உள்ள டாஸ்மாக் கடை, பக்தர்களுக்கு இடையூறாக உள்ளது. எனவே, பக்தர்களின் நலன் கருதி, கோவில் அருகில் உள்ள டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.