கும்மிடிப்பூண்டி : கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில், 15 வார்டுகள் உள்ளன. அந்த வார்டு உறுப்பினர்கள் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று துவங்கியது.
செயல் அலுவலரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான யமுனா தலைமையில், கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது.கும்மிடிப்பூண்டி இன்ஸ்பெக்டர் பாலசுப்ரமணி தலைமையிலான போலீசார், பேரூராட்சி அலுவலகத்தில், பாதுகாப்பு பணி மேற்கொண்டு வருகின்றனர்.முதல் நாளான நேற்று, ஏராளமானோர் வேட்புமனு பெற ஆர்வமுடன், பேரூராட்சி அலுவலகம் வந்தனர்.