திருக்கழுக்குன்றம் : திருக்கழுக்குன்றம் வாகன நிறுத்துமிடம் ஏலம், தேர்தல் நடத்தை விதிகளால் ஒத்தி வைக்கப்பட்டது.
திருக்கழுக்குன்றத்தில், வேதகிரீஸ்வரர் கோவில் அமைந்துள்ள மலைக்குன்று - செங்கல்பட்டு சாலை இடையில், கோவில் நிலம் உள்ளது.இப்பகுதி திறந்தவெளியாக அமைந்து, தனியார் நிறுவன பஸ்கள், லாரிகள், வாடகை வேன்கள், ஜே.சி.பி., இயந்திரங்கள் ஆக்கிரமித்து நிறுத்தப்படுகின்றன.இந்நிலையில், கடந்த டிச., 18ம் தேதி, இங்கு ஆய்வு செய்த அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, இப்பகுதியை வாகன நிறுத்துமிடமாக பயன்படுத்தி வருவாய் ஈட்ட, உரிம பொதுஏலம் விட அறிவுறுத்தினார்.
இதையடுத்து, கோவில் நிர்வாகம், துவக்க ஏல தொகை மூன்று லட்சம் ரூபாய் நிர்ணயித்து, நேற்று முன்தினம், முதல்முறையாக பொது ஏலம் நடத்துவதாக அறிவித்தது.நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், நடத்தை விதிகளால், தேர்தலுக்கு பின் ஏலம் விட முடிவெடுத்து ஒத்திவைக்கப்பட்டது.