ஒரகடம் : ஒரகடத்தில் சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் தனியார் வாகனங்கள் மீது, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
ஸ்ரீபெரும்புதுார் - -சிங்கபெருமாள் கோவில் நெடுஞ்சாலை, வண்டலுார் - -வாலாஜாபாத் நெடுஞ்சாலை சந்திக்கும் இடத்தில் ஒரகடம் அமைந்துள்ளது.இங்குள்ள பஸ் நிறுத்தத்தில் இருந்து காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை மாவட்டங்களுக்கு, அரசு பேருந்தில் பொதுமக்கள் சென்று வருகின்றனர்.ஒரகடத்தில் தொழிற்சாலை பெருக்கத்தால் பஜார் பகுதியில் வணிக கடைகளும் அதிகரித்து உள்ளன.
இந்நிலையில், ஒரகடம் மேம்பாலம் மற்றும் சிங்கபெருமாள் கோவில் செல்லும் பகுதியில் ஏராளமான தனியார் டிராவல்ஸ் வாகனங்கள் ஆக்கிரமித்து நிறுத்தப்படுகின்றன. காலை, மாலை நேரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.சாலையோரம் ஆக்கிரமித்து நிறுத்தப்படும் தனியார் வாகனங்கள் மீது, ஒரகடம் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.