ஸ்ரீமுஷ்ணம் : ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சியில் 8 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சியில் 15 வார்டுகளில் 11 ஆயிரத்து 524 வாக்காளர்கள் உள்ளனர்.
இதில் 5,666 ஆண்கள், 5,857 பெண்கள் உள்ளனர். பேரூராட்சியில் 15 வார்டுகளில் 8 பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 5வது வார்டு ஆதி திராவிடர் (பொது), 2 மற்றும் 13 வார்டுகள் ஆதிதிராவிடர் மகளிருக்கும், 3,9,10,11,14,15 ஆகிய 6 வார்டுகள் மகளிர் பொது, மீதமுள்ள 1,4,6,7,8,12, ஆகிய 6 வார்டுகள் பொது வார்டுகளாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது பேரூராட்சியில் வார்டுகள் மறு வரையறை செய்துள்ளதால் அனைத்து அரசியல் கட்சியினரும் வார்டுகளில் தங்களது பலம் குறித்து ஆலோசனை செய்து வேட்பாளர்களை தேர்வு செய்கின்றனர்.
இதனால் ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சி தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. நேற்று வேட்பு மனு தாக்கல் துவங்கியதால் அரசியல் கட்சியினர் பேரூராட்சி அலுவலகத்திற்கு வந்து மனுக்களை பெற்றுச் செல்கின்றனர். தேர்தல் நடத்தும் அலுவலர் பாரதிதாசன் வேட்புமனுக்களை வழங்கினார்.