ஆவணங்களின்றி இயங்கிய 4 வாகனங்களுக்கு அபராதம் | செய்திகள் | Dinamalar
ஆவணங்களின்றி இயங்கிய 4 வாகனங்களுக்கு அபராதம்
Added : ஜன 29, 2022 | |
Advertisement
 
Latest district News

புதுச்சேரி : புதுச்சேரியில், போக்குவரத்து துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், ஆவணமின்றி இயங்கிய நான்கு வாகனங்களுக்கு அபராதமாக ஒரு லட்சத்து 50 ஆயிரம் வசூலிக்கப்பட்டது.



புதுச்சேரியில், அனுமதி இல்லாத வாகனங்கள் இயக்கப்படுவதாக புகார்கள் வந்தன. அதன்பேரில், உழவர்கரை வட்டார போக்குவரத்து அதிகாரி பிரபாகரராவ் தலைமையில், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சீனிவாசன், சண்முகநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் நேற்று கோரிமேடு, கிழக்கு கடற்கரை சாலை மற்றும் காமராஜர் சாலைகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, அவ்வழியே சென்ற வாகனங்களின் ஓட்டுநர் உரிமம், வாகனத்தின் உரிமம், புதுப்பித்தல் சான்று, பெர்மிட், சாலை வரி உள்ளிட்ட ஆவணங்கள் சரியாக உள்ளதா என ஆய்வு செய்தனர். அதில், போதிய ஆவணங்கள் இன்றி இயங்கிய நான்கு வாகனங்களுக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 400 ரூபாய் அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது.

 

Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X