வில்லியனுார் : சேதராப்பட்டு எச்.எம் ரோட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் வானுார் பக்தவச்சலம்,57; பெரும்பாக்கம் அர்சுணன், 55; கரசூர் கலியமூர்த்தி ஆகியோர் செக்யூரிட்டிகளாக வேலை செய்து வருகின்றனர்.
கடந்த 26ம் தேதி இரவு பணியில் இருந்தபோது நள்ளிரவில் நான்கு பேர் கொண்ட கும்பல் கம்பெனிக்குள் புகுந்தது. தட்டிக்கேட்ட செக்யூரிட்டிகள் மூவரையும் சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்து, தப்பிச்சென்றனர்.படுகாயமடைந்த அர்சுணன் உள்ளிட்ட மூவரும் ஜிப்மரில் சிகிச்சை பெறுகின்றனர். இது குறித்து அர்சுணன் கொடுத்த புகாரின் பேரில், சேதராப்பட்டு குமரன் நகர் கார்த்திகேயன், 22; பண்ருட்டி, குட்டியாம்பாளையம் சிவராமன்,21; விழுப்புரம், மேட்டுப்பாளையம் அண்ணா நகர் இளவரசன், 20, ஆகியோர் மீது சேதராப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.