பள்ளி, கல்லுாரி திறப்பு எப்போது? அமைச்சர் நமச்சிவாயம் பேட்டி | செய்திகள் | Dinamalar
பள்ளி, கல்லுாரி திறப்பு எப்போது? அமைச்சர் நமச்சிவாயம் பேட்டி
Added : ஜன 29, 2022 | |
Advertisement
 

புதுச்சேரி : புதுச்சேரியில் பள்ளி, கல்லுாரிகள் திறப்பது குறித்து பிப்ரவரி முதல் வாரத்தில் முதல்வருடன் கலந்து ஆலோசித்து அறிவிக்கப்படும் என, அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.இதுகுறித்து அவர், நிருபர்களிடம் கூறியதாவது:புதுச்சேரியில் கொரோனா தொற்றின் தாக்கத்தை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம்.



இன்னும் ஒரு வாரத்திற்குள் கொரோனாவின் தாக்கம் குறையும் என கருதுகிறோம். அந்த சூழலுக்கு ஏற்ப பள்ளி, கல்லுாரிகள் திறப்பது குறித்து பிப்ரவரி முதல் வாரத்தில் முதல்வருடன் கலந்து பேசி, உரிய அறிவிப்பை கல்வித்துறை அறிவிக்கும்.கல்வித்துறை செயலர் மற்றும் இயக்குநருடன் ஆலோசித்த பின், தேர்வுகள் எவ்வாறு நடைபெறும் என அறிவிக்கப்படும். சிறைச்சாலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. சிறையில் மொபைல் போன் மற்றும் கஞ்சா பயன்பாடு குறித்த புகார்களின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சிறையில் உள்ள ஜாமர் கருவியை ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.சிறையில் இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களுடன் தொடர்பு வைத்திருக்கும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தேவைப்பட்டால் குழு அமைத்து சிறை கண்காணிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X