கொரோனாவுடன் வாழ பழகி கொள்ள வேண்டும்; கவர்னர் தமிழிசை கருத்து | செய்திகள் | Dinamalar
கொரோனாவுடன் வாழ பழகி கொள்ள வேண்டும்; கவர்னர் தமிழிசை கருத்து
Added : ஜன 29, 2022 | |
Advertisement
 
Latest district News


புதுச்சேரி : கொரோனாவுடன் வாழ பழகிக் கொள்ள வேண்டும் என, கவர்னர் தமிழிசை கூறினார்.புதுச்சேரி ரோட்டரி சங்கம் சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை உடல் உறுப்புகள் வழங்கும் விழா, காராமணிக்குப்பம் முருகன் கோவிலில் நடந்தது.விழாவில், பயனாளிகளுக்கு செயற்கை உடல் உறுப்புகள் வழங்கிய கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:



புதுச்சேரியில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. பொது முடக்கம், ஊரடங்கு தடை ஏதுமின்றி, மக்களுக்கு பொருளாதாரம் பாதிப்பு இல்லாத வகையில், எச்சரிக்கையுடன் கொரோனா தடுப்பில் புதுச்சேரி முன் உதாரணமாக இருந்துள்ளது.கொரோனா 4வது அலை வரலாம். அதனால், இனி கொரோனாவுடன் வாழ பழகிக் கொள்ள வேண்டும். கொரோனாவில் இருந்து காக்க தடுப்பூசியே தீர்வு. தடுப்பூசி கண்டுபிடிக்க உதவியோருக்கு பத்ம விருது வழங்கப்பட்டுள்ளது.

தற்போது, குழந்தைகளுக்கான சொட்டு மருந்து தயாரிப்பில் ஐதராபாத்தை சேர்ந்த பயோடெக் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.தமிழகத்தில் தற்போது ஆரோக்கியமான சூழல் உள்ளதால் பள்ளிகள் திறக்கப்படுகிறது. நாம் தமிழக பாடத்திட்டத்தை பின்பற்றி வருவதால், புதுச்சேரியில் மீண்டும் பள்ளிகள் திறப்பது குறித்து முதல்வர் மற்றும் கல்வி அமைச்சருடன் கலந்து ஆலோசித்து அறிவிக்கப்படும்.பள்ளிகள் உடனே திறக்க வேண்டும் என்பது எனது எண்ணம். புதுச்சேரி தவில் வித்வானுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கியது பெருமை அளிக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X