புதுச்சேரி : கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்ள வலியுறுத்தி நாளை 30ம் தேதி காலை 8 மணிக்கு விழிப்புணர்வு நடைப்பயணம் நடக்கிறது.புதுச்சேரி ஒருங்கிணைந்த சிவனடியார் திருக்கூட்டம் சார்பில், கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்ள வலியுறுத்தி, நாளை 30ம் தேதி விழிப்புணர்வு நடைப்பயணம் நடக்க உள்ளது.
காந்தி வீதி, வேதபுரீஸ்வரர் கோவிலில் காலை 8 மணிக்கும் துவங்கும் நடைபயணம், வில்லியனுார் திருக்காமேஸ்வரர் கோவிலை அடைகிறது. இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த சிவனடியார்கள் தேவாரம், திருவாசக பாடல்களை பாடி, கயிலாய வாத்தியங்களை இசைத்தும் பங்கேற்கின்றனர். ஏற்பாடுகளை ஒருங்கிணைந்த சிவனடியார் திருக்கூட்டத்தினர் செய்துள்ளனர்.