கடலுார் : கடலுார் மாவட்டத்தில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 71 ஆயிரத்து 686 ஆனது.கடலுார் மாவட்டத்தில் நேற்று 360 பேருக்கு தொற்று உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 71 ஆயிரத்து 686 ஆனது. நேற்று 416 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால் குணமானோர் எண்ணிக்கை 67 ஆயிரத்து 618 ஆனது.மாவட்டத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 2,799 பேர் சிகிச்சை பெறுகின்றனர். கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்த 385 பேர் வெளி மாவட்ட மருத்துவ மனைகளில் சிகிச்சை பெறுகின்றனர். இறந்தவர்கள் எண்ணிக்கை 884 ஆக உள்ளது. நேற்று உயிரிழப்பு இல்லை.