வத்தலகுண்டு:பட்டிவீரன்பட்டி அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில், தம்பதி பலியாகினர்.
திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு, அண்ணா நகரில் வசிப்பவர் மீனாசாமி, 52; மனைவி ஜெயக்கொடி, 48.இருவரும் நேற்று, டி.வி.எஸ்., - எக்ஸ்.எல்., இருசக்கர வாகனத்தில் உறவினர் இறப்பிற்கு துக்கம் விசாரிக்க சென்றனர்.வத்தலகுண்டு பை - பாஸ் சாலை அருகே தம்பதி சாலையை கடந்தபோது, திண்டுக்கல்லில் இருந்து தேனிக்கு ரேஷன் அரிசி ஏற்றிச்சென்ற லாரி மோதி, சம்பவ இடத்திலேயே இருவரும் பலியாகினர். அதிவேகத்தில் வந்த லாரி அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. பட்டி வீரன்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.