கிராம மக்கள் மறியல் | விழுப்புரம் செய்திகள் | Dinamalar
கிராம மக்கள் மறியல்
Added : ஜன 29, 2022 | |
Advertisement
 

மயிலம் : மயிலம் அடுத்த கள்ளகொளத்துார் கிராமத்தில் ரேஷன் கடையில் குண்டு அரிசிக்கு பதிலாக வேறு அரிசி வழங்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.மயிலம் அடுத்த கள்ள கொளத்துார் கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் நேற்று குண்டு அரிசியை பணியாளர்கள் வழங்கினர்.



இதை பார்த்த கிராம மக்கள் இது சாதம் வடிப்பதற்கு ஏற்றதாக இல்லை எனக்கூறி நேற்று மதியம் 12:30 மணியளவில் கள்ளகொளத்துார் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.திண்டிவனம் வட்ட வழங்கல் அலுவலர் யுவராஜ், மயிலம் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் பழனிச்சாமி, பாலமுருகன் ஆகியோர் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வேறு அரிசி வழங்குவதாக கூறியதைத் தொடர்ந்து 1:00 மணியளவில் அனைவரும் கலைந்து சென்றனர்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X