திண்டிவனம் : திண்டிவனம் நகராட்சி தேர்தலில் பணிபுரியும் போலீசாருக்கு ஏ.எஸ்.பி., அபிேஷக் குப்தா ஆலோசனை வழங்கினார்.திண்டிவனம் நகராட்சி தேர்தலையொட்டி, நன்னடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. நேற்று முதல் வேட்பு மனு தாக்கல் துவங்கியது.
இதையொட்டி, நகராட்சி அலுவலகத்தின் வெளியேயும், உள்ளேயும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.அவர்களுக்கு, நேற்று திண்டிவனம் ஏ.எஸ்.பி. அபிேஷக் குப்தா ஆலோசனை வழங்கினார்.அப்போது, வேட்பு மனு தாக்கல் செய்ய வருவோருடன் ஒருவரை மட்டுமே அனுமதிக்க வேண்டும். கட்சிக்காரர்களுடன் பிரச்னை செய்யக்கூடாது.எந்த பிரச்னையாக இருந்தாலும், உடனடியாக உயரதிகாரிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும். அனைத்து போலீசாரும் தேர்தல் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றார்.திண்டிவனம் சப் இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தராசன், ரகுசந்திரன் உடனிருந்தனர்.