திருக்கோவிலுார் : அரகண்டநல்லுார் பேரூராட்சியில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் வேட்புமனு வினியோகம் துவங்கியது.உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று துவங்கியது. வரும் 4ம் தேதி வரை மனு தாக்கல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்ட நிலையில், அரசியல் கட்சிகள் வேட்பாளர் தேர்வில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
அரகண்டநல்லுார் பேரூராட்சி அலுவலகத்தில் வேட்புமனு படிவம் வழங்குவதற்காக தேர்தல் நடத்தும் அதிகாரி முருகன் மேற்பார்வையில், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வேட்புமனு விநியோகிக்க தயார் நிலையில் இருந்தனர்.ஒருவர் மட்டுமே மனுவைப் பெற்றுச் சென்றார்.இன்ஸ்பெக்டர் சித்ரா தலைமையில், சப் இன்ஸ்பெக்டர் புனிதவள்ளி மற்றும் போலீசார் பேரூராட்சி அலுவலக முகப்பில் தடுப்புகளை ஏற்படுத்தி பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.