மணிமாறனுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். கருத்து வேறுபாடால் மனைவி பிரிந்து பெற்றோர் வீட்டில் வசித்தார். தினமும் குடித்து, பெற்றோரிடம் தகராறு செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு போதையில் இருந்த அவர், பெற்றோருடன் வாக்குவாதம் செய்தார். ஆத்திரத்தில் விறகு கட்டையால் முருகேசன் அடித்ததில், மணிமாறன் மயங்கினார்.
அவர் மனைவியுடன், மகன் உடலை சைக்கிளில், காமராஜர் மேம்பாலம் அருகே வைகை ஆற்றுக்குள் வீசி, மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துள்ளார். இருவரிடமும் விசாரணை நடக்கிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.மகனை பெற்றோரே எரித்துக் கொன்ற சம்பவம், மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.