விழுப்புரம் : விழுப்புரம் நகராட்சியில் 23 ஓட்டுச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது.விழுப்புரம் நகராட்சி 33.13 சதுர கி.மீ., பரப்பளவில் அமைந்துள்ளது.
இங்குள்ள, 42 வார்டுகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது. நகராட்சி சேர்மன் பதவி, தற்போது பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், 25,34,42 ஆகிய 3 வார்டுகள் ஆதிதிராவிடர் பொதுவிற்கும், 13,19, 32 ஆகிய 3 வார்டுகள் ஆதிதிராவிடர் பெண்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும் 3, 4, 6, 7, 8, 9, 10, 11, 15, 16, 17, 18, 20, 21, 26, 30, 33, 40 ஆகிய வார்டுகள் பொது பெண்களுக்கும், 1, 2, 5, 12, 14, 22, 23, 24, 27, 28, 29, 31, 35, 36, 37, 38, 39, 41 ஆகிய வார்டுகள் பொது என ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.நகராட்சியில் 43 இடங்களில் 129 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.
இதில், 7 இடங்களில் 23 ஓட்டுச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. 123 ஓட்டுச்சாவடிகளில் சி.சி.டி.வி., மற்றும் 7 ஓட்டுச்சாவடிகளில் ஆன்லைன் பதிவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.